Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 008/116 திரு வாழ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 008/116 திரு வாழ

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 008/116 திருவாழ்உறந்தை எனும் உறையூர் !

    2/108. சோழ நாட்டுத் திருப்பதி - 2/40

    சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போல
    மறப்புடைய நாயேன் மனத்துள் - உறப் போந்து ,
    அறம் தையா நின்ற அரங்கா ! திரு வாழ்
    உறந்தையாய் ! இங்கு உறைந்தது ஓது

    பதவுரை :

    மறப்புடைய நாயேன் மறதி உள்ள நாயைப் போல இழிவான எனது
    மனத்துள் உறப் போந்து மனத்தில் நன்கு எழுந்தருளி இருந்து
    அறம் தையா நின்ற அரங்கா ! தருமத்தைப் பதிய வைத்த ரங்க நாதனே !
    திரு வாழ் உறந்தையாய் ! திரு மகள் வசிக்கும் உறையூரில் இருப்பவனே !
    சிறப்புடைய பெருமை பெற்ற
    செல்வத் திருப்பதிகள் போல செல்வம் நிறைந்த திருத்தலங்கள் போல்
    இங்கு உறைந்தது ஓது என் மனதில் வசிக்கும் காரணத்தைக் கூறு !


    --
    V.Sridhar

Working...
X