Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 003/108 எதிராசனĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 003/108 எதிராசனĮ

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 003/108 திராசன் பேர் சொன்னால் சன்மங்கள் எதிரா !

    முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்ட எல்லாம்
    என்னே மறந்தனையோ என் நெஞ்சே ! - சொன்னேன்
    இனியெதிராசன்மங்கள் இன்று முதல் பூதூர்
    முனியெதிராசன் பேர் மொழி

    பதவுரை : இனி + எதிரா + ன்மங்கள்
    முனி + எதிராசன்

    என் நெஞ்சே ! எனது மனமே !
    முன்னே பிறந்து இறந்து இதற்கு முன் பிறந்து , இறந்து
    மூதுலகில் பட்ட எல்லாம் பழமையான இவ்வுலகில் பட்ட துன்பங்களை
    மறந்தனையோ என்னே மறந்து விட்டாயா ? என்ன விபரீத புத்தி !
    சொன்னேன் கூறுகின்றேன்
    இன்று முதல் இன்று தொடங்கி
    பூதூர் முனிஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த துறவியான
    எதிராசன் பேர் மொழி யதி ராஜனுடைய திரு நாமத்தை சொல்லுவாய் !
    சன்மங்கள் இனி யெதிரா உனக்கு பிறப்புகள் இனி உண்டாகாது

    V.Sridhar

    Last edited by sridharv1946; 22-10-13, 19:49.
Working...
X