Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 101/100 தற்சிறப்புப் பாயிரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 101/100 தற்சிறப்புப் பாயிரம்

    3. அழகர் அந்தாதி - 101/100 தற்சிறப்புப் பாயிரம்

    அலங்காரருக்குப் , பரமச் சுவாமிக்கு , அழகருக்குக்
    கலங்காப் பெருநகரம் காட்டுவார்க்குக் கருத்து அன்பினால்
    நலங்காத சொற்றொடை அந்தாதியைப் பற்பனாபப் பட்டன்
    விலங்காத கீர்த்தி மணவாள தாசன் விளம்பினனே

    அலங்காரருக்குப் அலங்காரர் என்றும் ,
    பரமச் சுவாமிக்கு மேலான ஸ்வாமி என்றும் ,
    அழகருக்குக் அழகர் பிரான் என்றும் பெயர் பெற்றவரும்
    கலங்காப் பெருநகரம் அழிவில்லாப் பெருமை உடைய வைகுண்டத்தைக்
    காட்டுவார்க்குக் அடியவர்க்கு காண்பிப்பவருமான எம்பெருமானைப பற்றி
    கருத்து அன்பினால் மனத்தில் கொண்ட மெய்யன்பினால்
    நலங்காத சொற்றொடை காலத்தால் வாடாத சொல் மாலை ஆகிய
    அந்தாதியைப் அழகர் அந்தாதிப் பிரபந்தத்தை
    பற்பனாபப் பட்டன் பத்மநாப பட்டன் என்னும் பெரிய பட்டரை
    விலங்காத கீர்த்தி விட்டு நீங்காதவன் என்னும் புகழ் படைத்த
    மணவாள தாசன்அழகிய மணவாள தாசன்
    விளம்பினனே விண்ணப்பம் செய்தனன்

    *************************************
    அழகர் அந்தாதி முற்றிற்று
    *************************************
    --

    V.Sridhar

    Last edited by sridharv1946; 21-10-13, 21:48.
Working...
X