3. அழகர் அந்தாதி - 096/100 தொல்லலங்காரனை வணங்கு நெஞ்சே !
அல்லலங்காரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை என்றும்
பல்லலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று அறாது கண்டாய்
மல்லலங்காரிகையார் மருள் தீர்ந்து வணங்கு நெஞ்சே
தொல்லலங்காரனைத் தென் திரு மால் இருஞ் சோலையிலே
பதவுரை : அல்லல் + அங்கு + ஆரையும்
பல் + அலங்கா
மல்லல் + அம் + காரிகையார்
தொல் + அலங்காரனை
நெஞ்சே என் மனமே !
ஆரையும் அல்லல் சேர்விக்கும் எவருக்கும் துன்பம் கொடுக்கும்
ஐம்புல ஆசை ஐந்து புலன்களின் விருப்பங்கள்,
பல் அலங்கா நைந்து பற்கள் அசைந்து , உடல் தளர்ந்து ,
கோல் ஊன்றியும் கோலை ஊன்றும்படி ஆனாலும்
என்றும்பற்று அறாதுஎந்நாளும் தொடர்ச்சி விடாது .
மல்லல் அம் காரிகையார் மிக்க அழகுள்ள பெண்களிடம்
மருள் தீர்ந்து ஏற்படும் மோஹம் நீங்கி
தொல் அலங்காரனை அநாதியான அழகனை
தென் திரு மால் இருஞ் சோலையிலே அழகிய திருமாலிருஞ்சோலையில்
வணங்கு வணங்குவாய் !
--
V.Sridhar