3. அழகர் அந்தாதி - 095/100 அருளாளியைச் சேர்ந்தாருக்குத் தேவரும் நேர் அல்லரே !
பாதகரத்தனை பேரும் கனகனும் பல் நகத்தா-
லேதகரத்தனையற்கு அருளாளியை எட்டெழுத்துள்
ஓதகரத்தனைச் சுந்தரத் தோளுடையானை நவ-
நீதகரத்தனைச் சேர்ந்தாருக்குத் தேவரும் நேர் அல்லரே
பதவுரை : பாதகர் + அத்தனை
நகத்தாலே + தகர + தனையற்கு
ஓது + அகரத்தனை
நவநீத + கரத்தனை
பாதகர் அத்தனை பேரும் கனகனும் தீ வினையுடைய அசுரர்களும் , ஹிரண்யனும்
பல் நகத்தாலே தகர பல் , நகங்களால் பிளந்து அழிய
தனையற்கு அருள் ஆளியை அவனது பிள்ளைக்கு அருளிய நரசிம்மனும் ,
எட்டெழுத்துள் ஓது அகரத்தனை அஷ்டாக்ஷரத்துள் உள்ள அகார ரூபனும் ,
சுந்தரத் தோளுடையானை அழகிய தோள்களை உடையவனும் ,
தேவரும் நேர் அல்லரே தேவர்களும் ஒப்பு ஆக மாட்டார்
--

நவநீதகரத்தனைவெண்ணெய் உள்ள கையை உடையவனுமான அழகனை
சேர்ந்தார்க்கு சரணம் அடைந்தவர்களுக்கு தேவரும் நேர் அல்லரே தேவர்களும் ஒப்பு ஆக மாட்டார்
--
Comment