Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 094/100 அலங்காரன் பொன் திருப் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 094/100 அலங்காரன் பொன் திருப் பா

    3. அழகர் அந்தாதி- 094/100 அலங்காரன் பொன் திருப் பாதங்களே பதி எங்கும் உவந்தன!

    பணிபதி வாடநின்று ஆடின ; நூற்றுவர் பால் சென்றன ;
    பணிபதினாறு புவனமும் தாயின; பாப் பதின்மர்
    பணிபதி எங்கும் உவந்தன; பங்கயப் பாவையுடன்
    பணிபதி மார்பன் அலங்காரன் , பொன் திருப் பாதங்களே

    பதவுரை : பணி (நாக ) + பதி ( ராஜன் - காளியன் )
    பணி (கீழ்ப்படிந்த)+ பதினாறு
    பணி (துதிக்கும்) + பதி (இடம்)
    பணி (ஆபரணம் - கௌஸ்துபம் ) +பதி (பொருந்திய)

    பங்கயப் பாவையுடன் தாமரையில் இருக்கும் பாவை போன்ற திருமகளும்
    பணிபதி மார்பன் கௌஸ்துபம் எனும் ஆபரணமும் பொருந்திய மார்பு உடைய
    அலங்காரன் பொன் திருப் பாதங்களே அழகனின் பொன் மயமான திருவடிகள்
    பணிபதி வாடநின்று ஆடின நாகராஜன் காளியன் வருந்தும்படி அவன் தலையில் ஆடின
    நூற்றுவர் பால் சென்றன துரியோதனாதியரிடம் தூது சென்றன
    பணிபதினாறு புவனமும்தாயினகீழ்ப் படிந்த பதினாறு உலகங்களையும் தாவி அளந்தன
    பாப் பதின்மர் பணிபத்து ஆழ்வார்கள் பாசுரம் பாடிப் பணிந்த
    பதி எங்கும் உவந்தன தலங்களில் எல்லாம் விரும்பி இருந்தன


    V.Sridhar
    Last edited by sridharv1946; 20-10-13, 15:29.

  • #2
    Re: 3. அழகர் அந்தாதி - 094/100 அலங்காரன் பொன் திருப் ப&a

    சொல்லலங்காரம் பொருளலங்காரம் எம் தாய் மொழிக்கு ஈடேது

    Comment

    Working...
    X