3. அழகர் அந்தாதி - 090/100 மலை அலங்காரன் என் வினையை ஒரு நொடியில் கழித்தான் !
மொழித்தத்தை கொஞ்சும் மலை அலங்காரன் ; முன் நூற்றுவரை
அழித்தத்தை மைந்தர்க்கு அரசு அளித்தோன் ; அடி நாள் தொடர்ந்து என்
உழித்தத்தைச் செய்து அன்றி போகா வினையை ஒரு நொடியில்
கழித்தத்தை என் சொல்லுகேன் , தனக்கு ஆட்பட்ட காலத்திலே
பதவுரை : மொழி + தத்தை (கிளி)
உழி + தத்தை (ஆபத்து)
மொழி தத்தை கொஞ்சும் பேசுவதில் வல்ல கிளிகள் கொஞ்சும்
மலை அலங்காரன் திருமாலிருஞ்சோலை மலை அழகனும் ,
முன் நூற்றுவரை அழித்து முன்பு துரியோதனன் முதலிய நூறு பேரையும் கொல்வித்து
அத்தை மைந்தர்க்கு தனது அத்தை ஆகிய குந்தியின் புதல்வர்களுக்கு
அரசு அளித்தோன் அரசாட்சியைக் கொடுத்தவனுமான அழகன் ,
அடி நாள் தொடர்ந்து ஆதி காலத்திலிருந்து தொடங்கி
என் உழி தத்தைச் செய்து அன்றி என்னிடத்தில் துன்பம் செய்யாமல்
போகா வினையை என்னைவிட்டு விடாத என் கருமங்களை
தனக்கு ஆட்பட்ட காலத்திலே அவனுக்கு நான் அடிமைப் பட்ட
ஒரு நொடியில் கழித்தத்தை ஒரே வினாடியில் போக்கியதை
என் சொல்லுகேன் என்னவென்று சொல்லுவேன் ?
--
V.Sridhar