Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 086/100 சோலை மாமலை அச்சுதனை தாள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 086/100 சோலை மாமலை அச்சுதனை தாள்

    3. அழகர் அந்தாதி - 086/100 சோலை மாமலை அச்சுதனை தாள் அடைவீர் !

    அண்ணலைவான் மதி தோய் சோலை மாமலை அச்சுதனை ,
    தண்ணலைவானவனை , தெய்வநாதனை ,தாள் அடைவான்
    எண்ணலைவான் பகை ஆம் ஐவரோடு இசைந்து, இன்னம் உடல் -
    புண்ணலைவான் , எண்ணினாய் - மனமே உன் புலமை நன்றே !

    பதவுரை : அண்ணலை + வான்மதி
    தண் + அலை + வானவனை
    எண்ணலை + வான்
    புண் + அலைவான்

    மனமே என் நெஞ்சமே !
    அண்ணலை பெருமையில் சிறந்தவனும் ,
    தண் அலை வானவனை குளிர்ந்த பாற்கடலில் பள்ளி கொண்ட தெய்வமும் ,
    தெய்வநாதனை தேவர்கட்கு எல்லாம் தலைவனை
    வான் மதி தோய் சோலை மாமலை தூய சந்திரன் படியும் சோலைமலையில்
    அச்சுதனை இருக்கும் அச்சுதன் எனும் அழகரின்
    தாள் அடைவான் எண்ணலை திருவடிகளை அடைய எண்ணவில்லை !
    வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து, பெரும் பகைவர்கள் ஆன ஐம்புலன்களோடு கூடி
    இன்னம் உடல் புண்ணலைவான் உடல் ஆகிய புண்ணினால் வருந்துமாறு
    எண்ணினாய் நினைத்தாய் !
    உன் புலமை நன்றே ! உனது அறிவு தான் என்னே !

    V.Sridhar

Working...
X