3. அழகர் அந்தாதி - 086/100 சோலை மாமலை அச்சுதனை தாள் அடைவீர் !
அண்ணலைவான் மதி தோய் சோலை மாமலை அச்சுதனை ,
தண்ணலைவானவனை , தெய்வநாதனை ,தாள் அடைவான்
எண்ணலைவான் பகை ஆம் ஐவரோடு இசைந்து, இன்னம் உடல் -
புண்ணலைவான் , எண்ணினாய் - மனமே உன் புலமை நன்றே !
பதவுரை : அண்ணலை + வான்மதி
தண் + அலை + வானவனை
எண்ணலை + வான்
புண் + அலைவான்
மனமே என் நெஞ்சமே !
அண்ணலை பெருமையில் சிறந்தவனும் ,
தண் அலை வானவனை குளிர்ந்த பாற்கடலில் பள்ளி கொண்ட தெய்வமும் ,
தெய்வநாதனை தேவர்கட்கு எல்லாம் தலைவனை
வான் மதி தோய் சோலை மாமலை தூய சந்திரன் படியும் சோலைமலையில்
அச்சுதனை இருக்கும் அச்சுதன் எனும் அழகரின்
தாள் அடைவான் எண்ணலை திருவடிகளை அடைய எண்ணவில்லை !
வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து, பெரும் பகைவர்கள் ஆன ஐம்புலன்களோடு கூடி
இன்னம் உடல் புண்ணலைவான் உடல் ஆகிய புண்ணினால் வருந்துமாறு
எண்ணினாய் நினைத்தாய் !
உன் புலமை நன்றே ! உனது அறிவு தான் என்னே !
V.Sridhar