Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 081/100 அழகர் அணிந்த நார் இருந்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 081/100 அழகர் அணிந்த நார் இருந்த

    3. அழகர் அந்தாதி - 081/100 அழகர் அணிந்த நார் இருந்தால் வாழலாம் !

    சீரரிதாழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர், செங்கட்-
    போரரிதாள் புனை தார் அரிது ஆகில் , தண் பூந்துளவின்
    தாரரிதாவும் தழை அரிது ஆகில் , தழை தொடுத்த
    நாரரிதாகில் பிழைப்பு அரிதாம் - எங்கள் நன்னுதற்கே

    பதவுரை : சீர் + அரி (திருமால்)+ தாழ்
    போர் + அரி(சிங்கம்) + தாள்
    தார் + அரி(வண்டு) + தாவும்
    நார் + அரிது + ஆகில்


    சீர் அரி சிறந்த ஹரி என்ற பெயர் உடையவரும்
    செங்கண் போர் அரி சிவந்த கண்களை உடைய வரும் ,போரில் வல்லவரும்
    தாழ் பொழில் தாழ வளர்ந்துள்ள சோலைகளை உடைய
    மாலிருஞ்சோலையில் செல்வர் சோலைமலைச்செல்வரான அழகருடைய
    தாள் புனை தார் அரிது ஆகில் திருவடிகளில் தரித்த மாலை கிடைக்க அரிதானால் ,
    தண் பூந்துளவின் தார் குளிர்ந்த மலர்களை உடைய திருத்துழாய் மாலையில்
    அரி தாவும் தழை அரிது ஆகில் இடையே உள்ள வண்டு தாவும் தழையும் அரிதானால் ,
    தழை தொடுத்த நார் அரிதாகில் தழை தொடுக்கப்பட்ட நாரும் அரிதானால்
    எங்கள் நன்னுதற்கே அழகிய நெற்றியை உடைய எங்கள் மங்கை
    பிழைப்பு அரிதாம் உயிர் வாழ்வது கடினம்

    V.Sridhar


    Last edited by sridharv1946; 15-10-13, 12:58.

  • #2
    Re: 3. அழகர் அந்தாதி - 081/100 அழகர் அணிந்த நார் இருந்&a

    Nice explanation.. thank u..C. Rajendran, Coimbatore

    Comment


    • #3
      Re: 3. அழகர் அந்தாதி - 081/100 அழகர் அணிந்த நார் இருந்&a

      thereare over 300 similar threads. kindly go thro the same and send us the feed back whenever time permits

      thank you !

      Comment

      Working...
      X