3. அழகர் அந்தாதி - 080/100 சோலை மாமலைச் சீதரனே புவனங்களை உண்டு உமிழ்ந்தான் !
உண்டிறக்கும் புவனங்களை மீள உமிழ்ந்திலையேல் ,
பண்டிறக்கும் பதுமத்தோன் , புரந்தரன், பைந்தழல் போல் ,
கண்டிறக்கும் சங்கரன் முதலோர்களைக் கண்டவர் ஆர்
திண்டிறக்குஞ்சரம் சேர் சோலை மாமலைச் சீதரனே !
பதவுரை : உண்டு + இறக்கும் (செலுத்தும்)
பண்டு + இறக்கும் (அழிந்த )
கண் + திறக்கும்
திண் + திற + குஞ்சரம்
திண் திறக் குஞ்சரம் சேர் மிக்க வலிமை உடைய யானைகள் உள்ள
சோலை மாமலைச் சீதரனே ! திரு மாலிருஞ்சோலை மலையில் வாழும் திருமாலே !
உண்டு இறக்கும் பிரளய காலத்தில் நீ விழுங்கி உன் வயிற்றினுள் இறக்கிய
புவனங்களை மீள உமிழ்ந்திலையேல் உலகங்களை நீ மீண்டும் உமிழவில்லை எனில்
பண்டு இறக்கும் பதுமத்தோன் முன்பு அழிந்த பிரமனையும்
புரந்தரன் இந்திரனையும்
பைந்தழல் போல் கண் திறக்கும் புதிய நெருப்பு போல நெற்றிக் கண் திறக்கும்
சங்கரன் முதலோர்களைக் சிவன் முதலானவர்களையும்
கண்டவர் ஆர் மீண்டும் பார்த்தவர் யார் ? (யாரும் இல்லை )
V.Sridhar