Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 079/100 அலங்காரனைச் சரண் அடைந்த&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 079/100 அலங்காரனைச் சரண் அடைந்த&

    3. அழகர் அந்தாதி - 079/100 அலங்காரனைச் சரண் அடைந்தேன் ! முத்தி உண்டே !

    அடைக்கலந்தானை இரந்தாள் புகல அவள் பொருட்டால்
    படைக்கலந்தானைத் தருமன் கெடாமல் வெம் பாரதப்போர்-
    இடைக்கலந்தானை அலங்காரனைச் சரண் என்று அடைந்தேன்
    முடைக்கலந்தானையும்போது அயர்ப்பினும் முத்தி உண்டே

    பதவுரை : அடைக்கலம் + தானை (ஆடை)
    படைக்கலம் + தானை (சேனை)
    இடை + கலந்தானை
    முடை + கலம் + தான் + நையும்

    தானை இரந்தாள் ஆடையை இரந்து பெற்ற திரௌபதி
    அடைக்கலம் புகல சரணம் என்று சொன்னதால்
    அவள் பொருட்டால் அவள் காரணமாக
    படைக்கலம் தானை ஆயுதமும் சேனையையும் உடைய
    தருமன் கெடாமல் தரும புத்திரன் முதலானோர் அழியாதபடி

    வெம் பாரதப்போர் இடை கொடிய பாரதப்போரில்
    கலந்தானை அர்ஜுனனுக்கு சாரதியாய் சேர்ந்தவனான
    அலங்காரனைச் சரண் என்று அடைந்தேன் அழகனை அடைக்கலம் என்று அடைந்தேன்
    முடைக் கலம் தான் தீய நாற்றம் உடைய பாத்திரம் போன்ற இவ்வுடல்
    நையும்போது தளர்ந்து அழியும் அந்திமக் காலத்தில்
    அயர்ப்பினும் பெருமானை மறந்தாலும்
    முத்தி உண்டே எனக்கு மோக்ஷம் கிடைக்கும்


    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 13-10-13, 21:43.
Working...
X