3. அழகர் அந்தாதி - 077/100 இடபப் பெரும் கிரியாய் ! தொண்டு கொண்டு அருளே !
வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த் தாளில் வைத்தாய்
மொய்தாரை அத்தனை தீங்கு இழைத்தேனையும் மூது உலகில்
பெய்தாரை வானின் புரப்பான் இடபப் பெரும் கிரியாய் !
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ் தொண்டு கொண்டு அருளே
பதவுரை : மொய் + தாரை (நக்ஷத்திரம்)
பெய் + தாரை (மழை)
கொய் + தாரை (மாலை)
மூது உலகில் பழமையான உலகத்தில்
பெய் தாரை வானின் பொழியும் மழையை உடைய மேகம் போல்
புரப்பான் அனைவரையும் பாதுகாப்பதற்காக
இடபப் பெரும் கிரியாய் ரிஷப மலையில் இருப்பவனே !
முன் வைதாரையும் முன்பு (சிசுபாலன் போல்) நிந்தித்தவரையும்
மலைந்தாரையும் (தந்த வக்த்ரன் போல்) போர் செய்தவரையும்
மலர்த் தாளில் வைத்தாய் உனது தாமரை போன்ற திருவடிகளில் வைத்தாய்
மொய் தாரை அத்தனை நெருங்கிய நக்ஷத்திரங்கள் அளவு (அதிகமான)
தீங்கு இழைத்தேனையும் தீவினைகள் செய்த அடியேனையும்
கொய் தாரை வேய்ந்த திருவடிக் கீழ் பறித்த மலர் மாலைகள் உடைய திருவடியில்
தொண்டு கொண்டு அருளே அடிமை கொண்டு அருள்வாய்
--
V.Sridhar