3. அழகர் அந்தாதி - 075/100 அழகர் உகப்பது என் சிந்தனையே !
பருப்பதம் தாம் மன்னி நிற்பது ; பாற்கடல் பள்ளி கொள்வது ;
இருப்பதம் தாமம் ; பண்டு இப்போது எலாம் , இள ஞாயிறு அன்ன
உருப்பதம் தாமதர்க்கு ஈயாமல் அன்பர்க்கு உதவு அழகர் ,
திருப்பதம் தாமரை போல்வார், உகப்பது என் சிந்தனையே
பதவுரை : பருப்பதம் + தாம்
இருப்பது + அம் + தாமம்
உருப்பதம் + தாமதர்க்கு
திரு + பதம் + தாமரை
இள ஞாயிறு அன்ன உரு இளம் சூரியனைப் போன்ற உருவம் உள்ளவரும் ,
தாமதர்க்கு பதம் ஈயாமல் தாமச குணம் உள்ளவர்க்கு பரம பதம் அளிக்காதவரும் ,
அன்பர்க்கு உதவும் திருப்பதம் தன பக்தர்களுக்கு கொடுக்கும் திருவடிகள்
தாமரை போல்வார் தாமரை மலர் போன்று இருப்பவருமான
அழகர் அழகர் பெருமான்
பண்டு தாம் மன்னி நிற்பது முன்னர் தாம் நின்று கொண்ட இடம்
பருப்பதம்திரு மாலி ருஞ்சோலை மலை ஆகும் (அர்ச்சை)
பள்ளி கொள்வது பாற்கடல் சயனித்து இருப்பது திருப்பாற்கடல் (வியூஹம் )
இருப்பது அம் தாமம் வீற்றிருப்பது அழகிய ஸ்ரீ வைகுண்டம் (பரம்)
இப்போது எலாம் உகப்பது இப்பொழுது நிற்கவும், படுக்கவும் , இருக்கவும் விரும்புவது
என் சிந்தனையே எனது மனமே ஆகும் .
--
V.Sridhar