3. அழகர் அந்தாதி - 074/100 பிரான் நின்ற இடம் சோலைப் பருப்பதமே
உலகுதிக்கும்படி சிந்தித்துத் தந்து , இவ்வுலகில் உறும்
நலகுதிக்கும்படி நின்ற பிரான் இடம் - நானிலமும் ,
இலகுதிக்கும் , விசும்பும் , தொழ ஓங்கி ; இறால் வருடை
பலகுதிக்கும் தொறும் , தேன் பாயும் சோலைப் பருப்பதமே
பதவுரை : உலகு + உதிக்கும்படி
நல + குதிக்கும்படி
இலகு + திக்கும்
பல + குதிக்கும்
உலகு உதிக்கும்படி சிந்தித்து தந்துஉலகங்கள் உண்டாகும்படி நினைத்து, படைத்து
இவ்வுலகில் உறும் நல இவ்வுலகத்தில் மிக்க நன்மைகள்
குதிக்கும்படி நின்ற பிரான் மேன்மேலும் பொங்கும்படி நின்ற எம்பெருமான்
இடம் திருவுளம் உவந்து எழுந்தருளி இருக்கும் இடம் எது என்றால்
நானிலமும் இலகு திக்கும் நிலவுலகிலும் , எட்டு திக்குகளிலும்
விசும்பும் தொழ ஓங்கி வானத்திலும் உள்ளவர்கள் வணங்கும்படி உயர்ந்து
இறால் வருடை பல குதிக்கும் தொறும் மலை ஆடுகள் பல பாயும் தொறும்
தேன் பாயும் சோலைப் பருப்பதமே தேன் பெருகும் சோலை மலை ஆகும்