3. அழகர் அந்தாதி - 070/100 "போற்றி இராம" என்று சொல்வீர் !
"போற்றியிராம !" என்னார் ; சோலை மா மலை போத விடார் ;
மாற்றியிராவைப் பகல் ஆக்கிலார் ; வண்துழாய் குழல் மேல்
ஏற்றியிராசதமாக வையார்; என் இடரை எல்லாம்
ஆற்றியிரார் - அன்னைமார் - என்னை வாய் வம்பு அளக்கின்றதே !
பதவுரை : போற்றி + இராம
மாற்றி + இராவை
ஏற்றி + இராசதமாக
ஆற்றி + இரார்
அன்னைமார் எனது தாய்மார்கள்
போற்றி இராம என்னார் "இராம பிரானே ! வாழ்க !" என்று சொல்ல மாட்டார்கள்
சோலை மா மலை போத விடார் அழகர் மலைக்கு செல்ல விடமாட்டார்கள்
இராவைப் பகல் ஆக்கிலார் இரவைப் பகலாக மாற்ற மாட்டார்கள்
வண் துழாய் செழிப்பான திருத்துழாய் மாலையை
குழல்மேல் ஏற்றி என் கூந்தலில் சூட்டி
இராசதமாக வையார் மேன்மையாக வைக்க மாட்டார்கள்
என் இடரை எல்லாம் யான் படும் துன்பங்களை எல்லாம்
ஆற்றி இரார் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்
என்னை வாய் வம்பு அளக்கின்றதே என்னைப் பற்றி வாயினால் வம்பு பேசுவார்கள்
--
V.Sridhar