3. அழகர் அந்தாதி - 069/100 சோலை மலை அழகன் திருத்தாள் அன்றி, போற்றிலமே
பின்னிறப்பும் , பிறப்பும் , நரை மூப்பும் , பிணியும் , மனை
முன்னிறப்பும் , பிரித்தான் ; இருந்தானவர் மூது இலங்கை
மன்னிறப்புங்கக்கணை தொட்ட சோலை மலை அழகன் ;
பொன்னிறப்புண்டரிகத் திருத்தாள் அன்றி, போற்றிலமே
பதவுரை : பின் + இறப்பும்
முன் + இறப்பும் (கூரை)
மன் + இற + புங்க
பொன் + நிற + புண்டரிக
பிறப்பும் பின் இறப்பும் பிறப்பையும் அதன் பின் நேரும் இறப்பையும்
நரை மூப்பும் பிணியும் முடி நரைக்கும் முதுமையையும் , நோய்களையும்
மனை முன் இறப்பும் வீட்டின் மேல் கூரை போல் கவிழ்ந்துள்ள கருமங்களை
பிரித்தான் நீக்கியவனும்
இரும் தானவர் பெரிய அசுரர்களும்
மூது இலங்கை மன் பழமையான இலங்கையின் அரசனான இராவணனும்
இறப் புங்கக் கணை தொட்ட அழியும்படி சிறந்த அம்புகளை விடுத்தவனுமான
சோலை மலை அழகன் திரு மாலிருஞ்சோலை அழகனுடைய
பொன் நிற புண்டரிக பொன் நிறமான செந்தாமரை போன்ற
திருத்தாள் அன்றி திருவடிகளை அல்லாமல்
போற்றிலமே வேறு ஒன்றையும் வணங்க மாட்டோம் .
--
V.Sridhar