3. அழகர் அந்தாதி - 068/100 பதின்மர் நல்லியலைப்பரி அம் கழல் பற்றுமின் !
மெல்லியலைப்பரி அங்கனையாரும் வெறுத்து வசை
சொல்லியலைப்பர் ; இயங்க ஒட்டார் - சுடர் மா மலையைப்
புல்லியலைப்பரியங்கத்தில் ஏறும் புயல் , பதின்மர்
நல்லியலைப்பரி அம் கழல் - தாமம் நயந்த பின்னே
பதவுரை : மெல்லியலை + பரி (அன்பு )
சொல்லி + அலைப்பர்
புல்லி + அலை + பரியங்கத்தில்
நல் + இயலை + பரி (ஏற்ற)
சுடர் மா மலையைப் புல்லி விளங்கும் அழகர் மலையை அடைந்து
அலைப் பரியங்கத்தில் பாற்கடலில் ஆதி சேஷக் கட்டிலில்
ஏறும் புயல் ஏறிப் பள்ளி கொள்ளும் மேகம் போன்ற அழகர் பிரானது
பதின்மர் நல் இயலைப் பத்து ஆழ்வார்களுடைய சிறந்த பாசுரங்களை
பரி அம் கழல் ஏற்றுக்கொண்ட அழகிய திருவடிகளில்
தாமம் நயந்த பின்னே சாற்றிய மாலையை விரும்பிய பின்னே
மெல்லியலாளை மென்மையான இவளை
பரி அங்கனையாரும் அன்புடைய மாதர்களும்
வெறுத்து வசை சொல்லி அலைப்பர் வெறுத்துப் பழி கூறி வருத்துவர்
இயங்க ஒட்டார் இவள் இஷ்டப்படி செல்ல விட மாட்டார்கள்
--
V.Sridhar