3. அழகர் அந்தாதி - 064/100 அலங்காரனுக்கு என் பாடல் மாலை !
வாசம்பரந்த துழாயும் என் பாடலும் மாலை ஒளி
வீ சம்பரம் பசும் பொன்னும் என் வேட்கையும் வீற்றிருக்கும்
தேசம்பரமபதமும் என் சிந்தையும் தீ வளி ஆ-
காசம்பரவை மண் கண்டு உண்ட மால் அலங்காரனுக்கே
பதவுரை : வாசம் + பரந்த
வீசு + அம்பரம்
தேசம் + பரமபதமும்
காசம் + பரவை
தீ வளி ஆகாசம் பரவை மண் நெருப்பும் , காற்றும் ,வானமும் . கடல் நீரும் , பூமியும்
கண்டு உண்ட மால் அலங்காரனுக்கு படைத்து விழுங்கிய பெருமை உடைய அழகர் பிரானுக்கு
வாசம் பரந்த துழாயும் நறுமணம் பரவும் திருத்துழாயும்
என் பாடலும் மாலை நான் பாடும் செய்யுளும் சாத்தும் மாலை ஆகும்
பசும் பொன்னும் மாற்றுயர்ந்த பொன்னாலான பீதாம்பரமும்
என் வேட்கையும் யான் செய்கின்ற பக்தியும்
ஒளி வீசு அம்பரம் காந்தியை வீசும் உடுக்கும் ஆடையாம்
பரமபதமும் என் சிந்தையும் ஸ்ரீ வைகுண்டமும் , அடியேனுடைய மனமும்
வீற்றிருக்கும் தேசம் இருக்கும் இடமாம்