3. அழகர் அந்தாதி - 063/100 சோலைமாமலைக் கோவலனார் மாட்டு உரைப்பீர் !
சூட்டோதிமஞ்சென்று, சொல்லாது என் காதலை ; தும்பி இசைப்-
பாட்டோதிமங்கையரும் பணியார் ; பண்டு கல்மழைக்காக்
கோட்டோதிமம்எடுத்தார் சோலைமாமலைக் கோவலனார்
மாட்டோதிமஞ்சினங்காள் - உரைப்பீர், மறு வாசகமே
பதவுரை : சூட்டு + ஓதிமம்
பாட்டு + ஓதி + மங்கையரும்
கோட்டு + ஓதிமம்
மாட்டு + ஓதி + மஞ்சினங்காள்
மஞ்சினங்காள் மேகக் கூட்டங்களே !
சூட்டு ஓதிமம் உச்சிக் கொண்டையை உடைய அன்னப் பறவைகள்
சென்று சொல்லாது என் காதலை தலைவரிடம் என் ஆசையைக் கூறாது
தும்பி இசைப் பாட்டு மங்கையர் வண்டு இசைபாடும் கூந்தல் உடைய பெண்களும்
ஓதி பணியார் என் காதலை சொல்ல மாட்டார்கள்
பண்டு கல் மழைக்காக முன்பு கல் மழையைத் தடுப்பதற்காக
கோட்டு ஓதிமம் எடுத்தார் சிகரம் உள்ள கோவர்த்தன மலையை எடுத்தவரும் ,
சோலை மாமலைக் திரு மாலிருஞ்சோலையில் உள்ளவருமான
கோவலனார் மாட்டு ஆயனாரிடம் என் காதலைக் கூறி
மறு வாசகம் உரைப்பீர் அவரது பதிலை என்னிடம் சொல்லுங்கள்