3. அழகர் அந்தாதி - 062/100 நுங்கள் சொல்லு அலங்காரர்க்கு சூட்டுமினே !
செல்லுக்குவளை குழல் நாட்டம் என்று தெரிவையர் பால்
பல்லுக்குவளை முதுகு ஆம் தனையும் புன்பாட்டு உரைப்பீர் !
அல்லுக்குவளை உழும் பாண்டி நாட்டை அடைந்து , நுங்கள்
சொல்லுக்குவளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமினே !
பதவுரை : செல்லு + குவளை
பல் + உக்கு + வளை
அல்லுக்கு + வளை
சொல்லு + கு + அளை
குழல் செல்லு "கூந்தல் மேகம் போன்றது
நாட்டம் குவளை என்று கண்கள் நீலோற்பல மலர் போன்றது " என்றும்
தெரிவையர் பால் பெண்களிடம் ,
பல் உக்கு அவர்களுடைய பற்கள் எல்லாம் விழுந்து
வளை முதுகு ஆம் தனையும் முதுகு வளைந்து கூன் விழும் வரையிலும்
புன் பாட்டு உரைப்பீர் இழிவான பாடல்களை சொல்பவர்களே !
அல்லுக்கு வளை உழும் இரவில் சங்குகள் நிலத்தை உழும்
பாண்டி நாட்டை அடைந்து பாண்டி நாட்டிற்குச் சென்று
நுங்கள் சொல்லு உங்களுடைய சொல்மாலைகளை
கு அளை உண்டார்க்கு பூமியையும் வெண்ணெயையும் உண்டவரான
அலங்காரர்க்கு சூட்டுமினே அழகருக்கு சமர்ப்பியுங்கள் !