3. அழகர் அந்தாதி - 061/100சோலை மலையைக் கண்ணால் சேவிக்க, மலம் அறும்
பாவிக்கமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள்
ஆவிக்கமலத்து வீற்றிருப்பார்; அளிப்பாடல் கொண்ட
வாவிக்கமல மண நாறும் சோலை மலையைக் கண்ணால்
சேவிக்கமலம் அறும் - மனமே எழு, செல்லுதற்கே
பதவுரை : பாவிக்கு + அமல
ஆவி + கமலத்து
வாவி + கமல
சேவிக்க + மலம்
மனமே என் நெஞ்சமே !
பாவிக்கு அமல விரிஞ்சற்கு தீயவனான எனக்கும் , தூயவனான பிரமனுக்கும்
இறையவர் தலைவரும் ,
பத்தர் தங்கள் ஆவிக் கமலத்து பக்தர்களுடைய இதயக் கமலத்தில்
வீற்றிருப்பார் இருப்பவருமான
அளிப் பாடல் கொண்ட வண்டுகளின் இசைப் பாடல்களைக் கொண்ட
வாவிக் கமல மண நாறும் தடாகங்களின் தாமரை மணம் வீசும்
சோலை மலையை திருமாலிருஞ்சோலை மலையை
கண்ணால் சேவிக்க கண்களால் தரிசித்த உடன்
மலம் அறும் தீவினைகள் அகலும் ;
செல்லுதற்கே எழு ஆதலால் அங்கு போவதற்குத் தயாராய் இரு !