3. அழகர் அந்தாதி - 058/100சோலைமலை புகழ் ஓதி வித்தாவர் முத்தியில் !
திருவிளையாடு திண்தோள் செங்கண்மால் பல தேவருடன்
மருவிளையான் திருமாலிருஞ்சோலைமலை என ஓர்
உருவிளையாமல் பிறப்பார் பலர் ; புகழ் ஓதி , சிலர்
கருவிளையாநிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே
பதவுரை : திரு + விளையாடு
மருவு + இளையான்
உரு + விளையாமல்
கரு + இளையாநிற்க
திரு விளையாடும் திண் தோள் மகா லக்ஷ்மி குலாவும் இடமான வலிய தோள்களையும்,
செம் கண் மால் சிவந்த கண்களையும் உடைய திருமாலும் ,
பலதேவருடன் மருவு இளையான் பலராமருடன் சேர்ந்த தம்பியுமான எம்பெருமானுடைய
திருமாலிருஞ்சோலை மலை என "சோலை மலை" என்று
ஓர் உரு விளையாமல் ஒரு தரமேனும் சொல்லாமல்
பலர் பிறப்பர் பலர் பிறந்து வருந்துவார்கள்
சிலர் காமம் அற்றே சிலர் சிற்றின்ப ஆசை இல்லாமல்
புகழ் ஓதி அந்த மலையின் புகழைச் சொல்லி
கரு இளையாநிற்க பிறப்புகள் இவர்களை அண்டாமல் வலிமை இன்றி நிற்க
முத்தியில் வித்து ஆவர் வைகுண்டத்தில் முளைக்கும் விதை ஆவார்கள்