Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 057/100 அலங்கார ! உன் அடிமை ஆகிறோī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 057/100 அலங்கார ! உன் அடிமை ஆகிறோī

    3. அழகர் அந்தாதி - 057/100 அலங்கார ! உன் அடிமை ஆகிறோம் ! உன் திருவுளம் என்னவோ ?

    உய்வந்தொழும்பு செய்து என்று இருப்போமை உய்யாமல் , ஐவர் ,
    பெய்வந்தொழுவினைக்கே என்பரால் பெருந்தேன் சிகரம்
    தைவந்தொழுகும் மலை அலங்கார ! சதுமுகத்துத்
    தெய்வந்தொழும் தெய்வமே ! என் கொலோ , உன் திருவுளமே ?



    பதவுரை : உய்வம் + தொழும்பு
    பெய்வம் + தொழு + வினைக்கே
    தைவந்து + ஒழுகும்
    தெய்வம் + தொழும்

    பெருந்தேன் மிகுதியான தேன்
    சிகரம் தைவந்து ஒழுகும் சிகரத்தைத் தடவிக் கொண்டு பெருகும்
    மலை அலங்கார சோலை மலை அழகா !
    சதுமுகத் தெய்வம் நான்கு முகங்கள் கொண்ட கடவுளாகிய பிரமன்
    தொழும் தெய்வமே வணங்கும் முதல் கடவுளே !
    தொழும்பு செய்து உய்வோம் "அடிமை செய்து வாழ்வோம் "
    என்று இருப்போமை என்று எண்ணி இருக்கிற எங்களை
    ஐவர் ஐம்புலன்கள் ஆகிய பகைவர்கள்
    உய்யாமல் தொழு வினைக்கே "வாழ விடாமல் கொடிய பாவங்களில்
    பெய்வம் என்பர் அகப்படுத்துவோம்" என்கிறார்கள்
    உன் திரு உளம் என் கொலோ உன் கருத்து என்ன ?



    Last edited by sridharv1946; 17-09-13, 21:01.
Working...
X