3. அழகர் அந்தாதி - 056/100அழகருக்கு மலர் இட்டு தொண்டு செய்து இறைஞ்சுவீர் !
தொண்டுபடார் திருமாலிருஞ்சோலையில் சோதிக்கு அன்பு
கொண்டுபடாமலர் இட்டு இறைஞ்சார் மடக்கோதையரைக்-
கண்டுபடாமுலை தோயநுராகம் கருதி இரா
உண்டுபடாநிற்கும்போது நைவார் எங்ஙன் உய்வதுவே ?
பதவுரை : தொண்டு + படார்
கொண்டு + படா + மலர்
கண்டு + படாம் + முலை
உண்டு + படாநிற்கும்
திருமாலிருஞ்சோலையில் திருமாலிருஞ்சோலையில்
சோதிக்கு இருக்கும் சோதியான அழகர் பிரானுக்கு
அன்பு கொண்டு தொண்டு படார் பக்தி கொண்டு அடிமைப் பட மாட்டார் ;
படா மலர் இட்டு இறைஞ்சார் வாடாத மலர் இட்டு வணங்க மாட்டார் ;
மடக் கோதையரை கண்டு இளம் பெண்களைப் பார்த்து
படம் முலை தோய் கச்சு அணிந்த கொங்கைகளை அணைகிற
அனுராகம் கருதி இன்பத்தில் ஆசையை வைத்துக் கொண்டு
இரா உண்டு இரவில் உணவு உண்டு
படாநிற்கும்போது நைவார் படுத்துக் கொள்ளும்போது வருந்துபவர்கள்
எங்ஙன் உய்வது நற்கதி பெறுவது எவ்வாறோ ?