3. அழகர் அந்தாதி - 053/100சோலை மலை அரசே ! என்னைக் காப்பதற்கு நீ வரவேண்டும் !
உடலம்புயங்கத்து உரி போல் விடும் அன்று , உவணப்புள்ளின்
அ டலம்புயமிசை நீ வரவேண்டும் - ஐ ஆனற்கும் ,
மடலம்புயற்கும் , வரம் தரும் சோலை மலைக்கு அரசே !
கடலம்புயர்வரையால் அடைத்தாய் ! - என்னைக் காப்பதற்கே
பதவுரை : உடலம் + புயங்கத்து
அடல் + அம் + புய
மடல் + அம்புயற்கும்
கடல் + அம்பு + உயர்
ஐ ஆனற்கும் ஐந்து முகங்களை உடைய சிவனுக்கும் ,
மடல் அம்புயற்கும் தாமரையில் இருக்கும் பிரமனுக்கும்
வரம் தரும் வரங்களைக் கொடுக்கும்
சோலை மலைக்கு அரசே மாலிருஞ்சோலை மன்னனே !
கடல் அம்பு உயர் வரையால்கடல் நீரை , உயர்ந்த மலைகளால்
அடைத்தாய் அணை கட்டி அடத்தவனே !
புயங்கத்து உரி போல் பாம்பு தன தோலை உரிப்பது போல் ,
உடலம் விடும் அன்று என் உயிர் , இந்த உடலை விட்டு நீங்கும் போது
என்னைக் காப்பதற்கே என்னைப் பாது காப்பதற்காக
உவணப் புள்ளின் கருடப் பறவையின்
அடல் அம் புய மிசை வலிய அழகிய தோள்களின் மேல் ஏறி
நீ வர வேண்டும் நீ எழுந்தருள வேண்டும்