Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 052/100 அழகனை முன்பு நினையாததால&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 052/100 அழகனை முன்பு நினையாததால&

    3. அழகர் அந்தாதி - 052/100 அழகனை முன்பு நினையாததால் மீண்டும் பிறந்தேன் !

    நினைப்பரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் , நின் அன்பர்க்கும்
    வினைப்பரியானவன் வாய் பிளந்தாய் ! வியன் சோலை மலை
    தனைப்பரியாநின்ற தாள் அழகா ! முன் சனனத்துள்ளு
    ம்
    னைப்பரியாமல் அன்றோ பரித்தேன் இவ்வுடலத்தையே !




    பதவுரை : நினைப்பு + அரியாய்
    வினை + பரியானவன் (குதிரை)
    தனை + பரியாநின்ற (தாங்கப்படும் )
    உனை + பரியாமல் (பக்தி செய்யாமல்)


    உம்பர் யார்க்கும் நினைப்பு அரியாய் தேவர்கள் யாராலும் சிந்திக்க முடியாதவனே !
    நின் அன்பர்க்கும் நினைப்பு எளியாய் உன் பக்தர்களுக்கு சிந்திக்க எளியவனே !
    வினைப் பரியானவன் தீச் செயலுடைய கேசி எனும் குதிரையின்
    வாய் பிளந்தாய் வாயைக் கிழித்தனவனே !
    வியன் சோலை மலை தனை பெரிய திருமாலிருஞ்சோலை மலையால்
    பரியா நின்ற தாள் அழகா தாங்கப் படும் திருவடிகள் கொண்ட அழகர் பிரானே !
    முன் சனனத்துள்ளும் முன் பிறவிகளிலும்
    உனைப் பரியாமல் அன்றோ உன் மீது பக்தி செய்யாததால் அன்றோ
    இவ்வுடலத்தைப் பரித்தேன் இப்பிறவியை எடுத்தேன் !

    Last edited by sridharv1946; 14-09-13, 21:34.
Working...
X