Announcement

Collapse
No announcement yet.

தமிழர்கள் பயன்படுத்திய பின்னங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழர்கள் பயன்படுத்திய பின்னங்கள்

    தமிழர்கள் பயன்படுத்திய பின்னங்கள் பற்றி

    1 ஒன்று

    1/2 அரை
    1/4 கால்
    1/8 அரைக்கால்
    1/16 வீசம்
    1/32 அரை வீசம்
    1/320 முந்திரி
    -1/320 க்கும் கீழான சிறிய பின்னங்களைப் பொதுவாக கீழ்முந்திரி எனவும் கீழ்வாயிலக்கம் எனவும் சொல்வதுண்டு.:
    கீழ்முந்திரி 1/102400
    இம்மி 1/2150400
    மும்மி 1/23654400
    அணு 1/165580800
    குணம் 1/1490227200
    பந்தம் 1/7451136000
    பாகம் 1/44706816000
    விந்தம் 1/312947772000
    நாகவிந்தம் 1/5320111104000
    சிந்தை 1/7448155,5456000
    கதிர்முனை 1/1489631109120000
    குரள்வளைப்பிடி 1/5958524436480000
    வெள்ளம் 1/357511466188,80000
    நுண்மணல் 1/3575114,6618880,0000
    தேர்த்துகள் 1/23238245,3022720,0000


    தமிழர்கள் இவ்வளவு நுண்ணிய அளவைகளை எங்கு உபயோகித்தனர் என்று தெரியவில்லை . இப்பொழுது இவ்வளவைகள் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியவும் தெரியாது.


    ப்ரஹ் மண்யன்
    பெங்களூரு


  • #2
    Re: தமிழர்கள் பயன்படுத்திய பின்னங்கள்

    சார் நான் படிக்கும்போது வீசம் வாய்ப்பாடு வரைதான் படித்துள்ளேன் அத்ற்கும் கீழே இவ்வளவு பின்னங்களா நம்பவே முடியவில்லையே எங்கிருந்து பிடித்தீர்கள்? பேச்சு வழக்கில் இம்மி (இம்மி கூட) அணு (அவனன்றி ஓர் அணுவும்) கேள்விப்பட்டுள்ளேன் அவை பின்னங்கள் என்று அறியாமாலேயே

    Comment


    • #3
      Re: தமிழர்கள் பயன்படுத்திய பின்னங்கள்

      இவ்வளவைகளை செய்யுளாக பயின்று வந்தார்களென அறிகிறோம் . கீழே ஓர் உதாரணம் கொடுத்திருக்கிறேன் :

      சின்னம்பத் தேமுக்கால் செப்புந் தொகை நுண்மை

      நுண்மையில் மூன்று நுவல் இம்மி - இம்மி
      இருபத் தரையொன்றாங் கீழாக வேதான்
      வருமுந் திரியெனவே வாட்டு.


      ----- சின்னம் 10 1/2 கொண்டது நுண்மை முந்திரி; நுண்மை முந்திரி 3 கொண்டது இம்மி முந்திரி; இம்மி முந்திரி 10 1/2 கொண்டது கீழ்முந்திரி 320 கொண்டது மேல் முந்திரி; மேல் முந்திரி 320 கொண்டது ஒன்றெனப்படும்.
      ----

      Comment

      Working...
      X