Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 047/100 அரங்கன் , அழகன் , எம் கோன் க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 047/100 அரங்கன் , அழகன் , எம் கோன் க

    3. அழகர் அந்தாதி - 047/100 அரங்கன் , அழகன் , எம் கோன் கதையையே கேட்போம் !

    சரணியனாகத் தனை நினைந்தாரைத் தன போல வைக்கும்

    அரணியனாகத்து அணையான் , அரங்கன் , அழகன் , எம் கோன் ,

    இரணியனாகம் இடந்தான், கதை அன்றி ஈனர் தங்கள்

    முரணியனாகத்தும் புன் குரல் ஓரி முதுக் குரலே




    பதவுரை :

    சரணியன் + ஆக

    அரணியன் + நாகத்து

    இரணியன் + ஆகம்

    முரண் + இயல் + நா + கத்தும்

    .



    சரணியன் ஆகத் ..................சரணம் அடையத் தக்கவனாக

    தனை நினைந்தாரை ...........தன்னை எண்ணிச் சரணம் அடைந்தவர்களை

    தன் போல வைக்கும் ............தன்னைப் போலவே வைத்து அருளும்

    அரணியன் ............................பாதுகாப்பு உள்ளவனும் ,

    நாகத்து அணையான் ...........ஆதிசேஷனைச் சயனம் ஆக உடையவனும் ,

    அரங்கன் ..............................திருவரங்கத்தில் எழுந்தருளி இருப்பவனும் ,

    எம் கோன் ............................எமது தலைவனும் ,

    இரணியன் ஆகம் இடந்தான் ..இரணியனது மார்பைப் பிளந்தவனுமான

    அழகன் கதை அன்றி .............அழகர் பிரானுடைய சரித்திரம் இல்லாமல்

    ஈனர் .....................................இழிவான பிற சமயத்தார் ,

    தங்கள் முரண் இயல் நா ........தங்களுடைய மாறுபாடு பொருந்திய நாவினால்

    கத்தும் புன் குரல் ...................பிதற்றும் இழிவான சொற்கள்

    ஓரி முத்துக் குரலே ................கிழ நரி ஊளையிடும் பெரும் குரல் போல் வெறுக்கத்தக்கது ஆகும்

    Last edited by sridharv1946; 02-03-18, 16:11.
Working...
X