Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 045/100 வைகுண்டத்துக்கு முன்னே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 045/100 வைகுண்டத்துக்கு முன்னே

    3. அழகர் அந்தாதி - 045/100 வைகுண்டத்துக்கு முன்னே அமராவதியும் நரகு ஆகும் !

    வீழமராமரம் எய்தார் மதி தவழ் வெற்பை நெஞ்சே
    தாழமராடச் சமன் குறுகான் இச்சரீரம் என்னும்
    பாழமராமல் பர கதி ஏற்றுவர் பார்க்கில் விண்ணோர்
    வாழமராவதியும் நரகு ஆம் அந்த மா நகர்க்கே



    பதவுரை : வீழ + மராமரம்
    தாழ் + அமர் + ஆட
    பாழ் + அமராமல்
    வாழ் + அமராவதியும்

    நெஞ்சே மனமே !
    மரா மரம் வீழ எய்தார் மரா மரங்கள் விழும்படி , அம்பு எய்தவரான அழகருடைய
    மதி தவழ் வெற்பை தாழ் சந்திரன் தவழும் சோலை மலையை வணங்குவாய் !
    அமர் ஆட சமன் குறுகான் போர் செய்து உயிர் எடுக்க யமன வர மாட்டான்
    இச்சரீரம் எனும் பாழ் அமராமல் இவ்வுடம்பு ஆகிய பாழிலே பொருந்தாதபடி
    பரகதி ஏற்றுவர் எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தில் சேர்த்து அருள்வார் .
    பார்க்கில் ஆராய்ந்து பார்த்தால்
    விண்ணோர் வாழ் அமராவதியும் தேவர்கள் வாழும் அமராவதி நகரமும்
    அந்த மா நகர்க்கே ஸ்ரீ வைகுண்டத்துக்கு முன்னே
    நரகு ஆம் நரகம் எனத் தக்கதாம்


    Last edited by sridharv1946; 13-09-13, 11:38.
Working...
X