Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 040/100 அழகர்க்கு அடிமை என்று உண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 040/100 அழகர்க்கு அடிமை என்று உண

    3. அழகர் அந்தாதி - 040/100 அழகர்க்கு அடிமை என்று உணர்ந்தால் , யாரும் பிழைப்பார்களே !

    நேராயவேதனை நெஞ்சு இடந்தாய் ! நெடுஞ்சோலை மலைக்-
    காராயவேதனை முன் படைத்தாய் ! நின் கழற்குத் தொண்டு என்று
    ஆராயவேதனைப் புன் பிறப்பு ஓயும் ; அவா-வழியின்
    பேராயவேதனை இல் உழைப்போரும் பிழைப்பர்களே






    பதவுரை : நேர் + ஆய + ஏதனை
    கார் + ஆய ! + வேதனை
    ஆராயவே + தனை
    பேர் + ஆய + வேதனை

    நேர்ஆய ஏதனை எதிரில் நின்ற குற்றமுடைய இரணியனுடைய
    நெஞ்சு இடந்தாய் மார்பை நரசிம்மனாய் பிளந்தவனே !
    நெடும் சோலை மலை திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள
    கார் ஆய கரிய மேனி கொண்ட ஆயர் குலத்தவனே !
    வேதனை முன் படைத்தாய் பிரமனை முன்பு படைத்தவனே !
    நின் கழற்கு தொண்டு என்று உனது திருவடிகளுக்கு அடிமை என்று
    ஆராயவே ஆராய்ந்து உணர்ந்து கொண்டால் ,
    தனைப் புண் பிறப்பு ஓயும் அத்தனை இழிவான பிறப்புகளும் ஓய்ந்து விடும் .
    அவா வழியின் ஆசை வழியால்
    பேர் ஆய வேதனை பெரிய துன்பங்களின் தொகுதியைத் தரும்
    இல் உழைப்போரும் சம்சார பந்தத்தில் இருப்போரும்
    பிழைப்பார்களே திருமாலுக்கு அடிமை என்று உணர்ந்தால் , வாழ்வார்கள்



    Last edited by sridharv1946; 11-09-13, 21:22.
Working...
X