Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 038/100 தவித்தானை வா என வந்தானைப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 038/100 தவித்தானை வா என வந்தானைப

    3. அழகர் அந்தாதி - 038/100 தவித்தானை வா என , வந்தானைப் பற்றினென் தஞ்சம் என்றே !

    கவித்தானை மன்னற்கு நட்பு ஆய் முடி கவித்தானை அன்று

    புவித்தானை வற்றப் பொழி சரத்தானைப் பொருது இலங்கை
    அவித்தானை மாலிருஞ்சோலை நின்றானை அழகனை முன்
    தவித்தானை வா என வந்தானைப் பற்றினென் தஞ்சம் என்றே






    பதவுரை :கவி + தானை ( படை)
    புவி + தானை (ஆடை)

    கவி தானை மன்னற்கு வானர சேனைகளின் மன்னன் ஆன சுக்ரீவனுக்கு
    நட்பு ஆய் முடி கவித்தானை நண்பன் ஆகி , மகுடாபிஷேகம் செய்வித்தவனும்
    புவி தானை வற்ற பூமிக்கு ஆடை ஆகிய கடல் வற்றும்படி
    பொழி சரத்தானை பிரயோகித்த ஆக்னேயாஸ்திரத்தை உடையவனும் ,
    பொருது இலங்கை அவித்தானை போரிட்டு இலங்கையை அழித்தவனும் ,
    மாலிருஞ்சோலை நின்றானை திரு மாலிருஞ்சோலையில் நிற்கும் அழகரும் ,
    ஆனை தவித்து வா என கஜேந்திரன் வருந்தி "காக்க வா" என்று அழைத்தவுடன்
    வந்தானை அழகனைவந்தவனுமான அழகர் பிரானை
    தஞ்சம் என பற்றினேன் சரணம் என்று அடைந்தேன்







Working...
X