3. அழகர் அந்தாதி - 036/100 சோலை மாமலை ஆதிபரே பாவை உருகுவது ஓர்கிலர் !
திங்களப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் செழுஞ்சங்கு போ-
லுங்களப்பாவை உருகுவது ஓர்கிலர் - உம்பர் எல்லாம்
"எங்களப்பா எமைக் காவாய்" என உலகு ஈர் அடியால்
அங்களப்பான் வளர்ந்தார் சோலை மாமலை ஆதிபரே

பதவுரை : திங்கள் + அப்பாநின்ற
போலும் + களப் + பாவை
எங்கள் + அப்பா
அங்கு + அளப்பான்
உம்பர் எல்லாம் தேவர்கள் எல்லோரும்
எங்கள் அப்பா எமைக் காவாய் என "எங்கள் தலைவா ! எங்களைக் காப்பாய் !" என்று வேண்ட
உலகு ஈர் அடியால் அளப்பான் உலகங்களை இரண்டு அடிகளால் அளக்குமாறு
அங்கு வளர்ந்தார் அப்பொழுது திரிவிக்ரமனாய் வளர்ந்த
சோலை மலை ஆதிபரே சோலைமலைக்குத் தலைவனான அழகர்
செழும் சங்கு போலும் செழுமையான சங்கைப்போன்ற
களப்பாவை கழுத்தை உடைய இந்த பெண்
திங்கள் அப்பா நின்ற சந்திரன் பூசுகின்ற
செந்தீக் கொழுந்தின் அக்கினிச் சுவாலையினால்
உருகுவது ஒர்கிலர் வருந்துவதை அறியவில்லை