Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 033/100 நெஞ்சே - திருமாலிருஞ்சோல

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 033/100 நெஞ்சே - திருமாலிருஞ்சோல

    3. அழகர் அந்தாதி - 033/100 நெஞ்சே - திருமாலிருஞ்சோலையானை என்று பேணுவையே ?

    தேராயிரவு பகல் இரை தேடுவை ; தீமை நன்மை
    பாராயிரங்குவ பாவையரால் ; பண்டு மாவலியால்
    சோராயிரந்தவனை , திருமாலிருஞ்சோலை நின்ற
    பேராயிரம் உடையானை - நெஞ்சே - என்று பேணுவையே ?



    பதவுரை :தேராய் + இரவு
    பாராய் + இரங்கு
    சோராய் + இரந்தவனை
    பேர் + ஆயிரம்

    நெஞ்சே தேராய் என் மனமே ! நீ ஆராய்ந்து தெளிய மாட்டாய் !
    இரவு பகல் இரை தேடுவை இரவும் பகலும் உணவைத் தேடி அலைவாய் !
    தீமை நன்மை பாராய் எது தீயவை எது நல்லவை என்று நோக்க மாட்டாய் !
    பாவையரால் இரங்குவை பெண்களுக்காக வருந்துவாய் !
    பண்டு மாவலியால் சோராய் இரந்தவனை முன்பு மாவலியிடம் கபடமாய் யாசித்தவனும் ,
    திருமாலிருஞ்சோலை நின்ற சோலை மலையில் நிற்பவரும் ,
    பேர் ஆயிரம் உடையானை ஆயிரம் திருநாமங்கள் உடையவருமான அழகர்பிரானை
    என்று பேணுவையோ எப்போது நீ தியானிக்கப் போகிறாயோ ?



    Last edited by sridharv1946; 10-09-13, 13:11.
Working...
X