3. அழகர் அந்தாதி - 031/100 சோலைமலை பத்தர்கள் என்னை ஆளும் பரமர்கள் !
முத்தரன்றே ! நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர் ;
பித்தரன்றே ! நினக்கே பித்தராகில் - பிரமன் கம் கை
வைத்தரன்றேய் துயர் தீர்த்தாய் ! - நின் சோலைமலை மருவும்
பத்தரன்றே பரிவால் என்னை ஆளும் பரமர்களே ?
பதவுரை : முத்தர் + அன்றே (அப்பொழுதே)
பித்தர் + அன்றே (இல்லையே)
வைத்து + அரன் + தேய்
பத்தர் + அன்றே (அல்லவா ?)
பிரமன் கம் கை வைத்து பிரமனது தலையைக் கையில் வைத்துக்கொண்டு
அரன் தேய் துயர் தீர்த்தாய் சிவன் பட்ட துன்பத்தை ஒழித்தவனே !
நின் கழல் உன் திருவடிகளை
ஒரு கால்கை முகிழ்க்கப் பெற்றோர் ஒரு தரம் கை கூப்பி வணங்கியவர்கள்
முத்தர் அன்றே அப்பொழுதே முக்தி பெற்றவர் ஆவார் !
நினக்கே பித்தர் ஆகில் உன்னிடமே பக்திப் பித்து கொண்டவரானால்
பித்தர் அன்றே அவர்கள் பித்தர்களே அல்லர் !
நின் சோலை மலை மருவும் உனது திருமாலிருஞ்சோலை மலையில் இருக்கும்
பத்தர் அன்றே அடியார்கள் அல்லவா
பரிவால் எனை ஆளும் பரமர்களே அன்பால் என்னை ஆட்கொள்ளும் மேலோர் ஆவார் ?