Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 027/100 அன்னைமார் அழகர் மீதுள்ள

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 027/100 அன்னைமார் அழகர் மீதுள்ள

    3. அழகர் அந்தாதி - 027/100 அன்னைமார் அழகர் மீதுள்ள என் காதலை அறியார் !

    கழலப்புகுந்தவளை அறியார் என் கருத்தறியா-
    ரழலப்புகன்றொ ருப்பாரன்னைமார் அறுகாற்சுரும்பு
    சுழலப்புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலையென்னார்
    தழலப்புவரென்றனங்களிலே சந்தனங்கள் என்றே



    பதவுரை : கழல + புகுந்த
    அழல + புகன்று
    சுழல + புனைந்த
    தழல் + அப்புவர்

    அன்னைமார் என் தாய்மார்கள்
    கழலப் புகுந்த வளை அறியார் உடல் மெலிவதால், கழலும் வளைகளை அறிய மாட்டார்கள் ;
    என் கருத்து அறியார் என் மனத்தின் காதலை உள்ளபடி உணரார் ;
    அழல புகன்று ஒறுப்பர் என் மனம் கொதிக்கும்படி கடுமையாகப் பேசி வருத்துவார் ;
    அறு கால் சுரும்பு சுழல ஆறு கால்களுள்ள வண்டுகள் சுழன்று மொய்க்கும்படி
    புனைந்த துழாய் மார்பர் திருத் துழாய் மாலை மார்பில் தரித்த அழகர் பிரானது
    மாலிருஞ்சோலை என்னார் திரு மாலிருஞ்சோலை என்று சொல்ல மாட்டார் ;
    என் தனங்களில் எனது தனங்களின் மேல், குளிர்விப்பதாக நினைத்து
    சந்தனங்கள் என்று தழல் அப்புவர் சந்தனம் என்று கூறி நெருப்பைப் பூசுவார்கள் .

Working...
X