3. அழகர் அந்தாதி- 026/100 அழகன் சிவந்த கழல் இணை என்னை நாசம் அறப் பண்ணின !
நண்ணினநாகமுடி மேல் நடித்து , என்னை நாசம் அறப்-
பண்ணினநாகமும் பாரும் அளந்தன ; பண்டு தம்பி
மண்ணினநாக வனம் போயின - வளர் சோலைமலைக்-
கண்ணினநாகம் கரியான் சிவந்த கழல் இணையே
பதவுரை : நண் + இன + நாக + முடி
பண்ணின + நாகமும்
மண்ணினன் + ஆக
கண் + இனன் + ஆகம்
வளர் சோலைமலைக் கண் இனன் வளர்ந்த சோலைமலையில் உதித்த சூரியன் போன்றவனும்
ஆகம் கரியான் கருத்த திருமேனி கொண்டவனுமான அழகர் பிரானுடைய
சிவந்த கழல் இணையே செந்நிறமுள்ள இரு திருவடிகள்
நாக நண் இனன் கிருஷ்ணனாக , காளியன் எனும் பாம்பின்
முடி மேல் நடித்து தலைகளின் மேல் நடனம் ஆடி
என்னை நாசம் அறப் பண்ணின என்னை அழியாது வாழும்படி செய்தன ;
நாகமும் பாரும் அளந்தன வாமனனாக , விண்ணையும் மண்ணையும் அளந்தன ;
பண்டு தம்பி மண்ணினன் ஆக முன்பு ராமனாக , தம்பி பரதன் அரசன் ஆகுமாறு
வனம் போயின வனவாசம் சென்றன .