Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 025/100 நாரணனை அன்பால் பணிவார் ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 025/100 நாரணனை அன்பால் பணிவார் ந

    3. அழகர் அந்தாதி- 025/100 நாரணனை அன்பால் பணிவார் நண்ணாப் பதம் நண்ணுவரே !

    கோவலன்பார்ப்புடன் கேகயம் சூழ குளிர் சோலை மலைக்-
    காவலன்பாற்கடல் கண் துயில் மால் அலங்காரன் என்றே
    பாவலன்பால் பணிவார் அணிவானவர் ஆகி , மறை
    நாவலன்பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே



    பதவுரை : கோவலன் + பார்ப்புடன்
    காவலன் + பாற்கடல்
    பாவல் + அன்பால்
    நாவலன் + பார்ப்பதி


    கோவலன் "மாடு மேய்க்கும் ஆயனாய் வளர்ந்தவன்;
    பார்ப்புடன் கேகயம் சூழ் குஞ்சுகளுடன் மயில்கள் சூழ்ந்த
    குளிர் சோலை மலைக் காவலன் குளிர்ந்த மாலிருஞ்சோலைக்குத் தலைவன்
    பாற்கடல் கண்துயில் பாற்கடலில் யோக நித்திரை செய்யும்
    மால் அலங்காரன் என்றே பெருமை பொருந்திய அழகன்" என்று
    பாவல் அன்பால் பணிவார் சொல்லிக்கொண்டு பக்தியினால் வணங்குபவர்கள்
    அணி வானவர் ஆகி அழகிய முக்தர்கள் ஆகி
    மறை நாவலன் வேதம் வல்ல நாவுடையவனான பிரமனும் ,
    பார்ப்பதி நாதன் பார்வதி நாயகனான சிவனும்
    நண்ணாப்பதம் நண்ணுவர் அடைய முடியாத ஸ்ரீ வைகுண்டத்தை அடைவார்கள்
    --
Working...
X