Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 024/100 சோலை மலைக் கோவலனே ! அருள்ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 024/100 சோலை மலைக் கோவலனே ! அருள்ī

    3. அழகர் அந்தாதி- 024/100 சோலை மலைக் கோவலனே ! அருள்வாய் !

    என்றுதரங்கலந்தேன் அற்றை நான்று தொட்டு இற்றைவரை
    நின்றுதரங்கிக்கின்றேற்கு அருள்வாய் - நெடுங்கான் கடந்து
    சென்றுதரங்கக்கடல் தூர்த்து இலங்கையில் தீயவரைக்-
    கொன்றுதரங்குவித்தாய் சோலை மா மலைக் கோவலனே



    பதவுரை : என்று + உதரம்
    நின்று + தரங்கிக்கின்றேற்கு
    சென்று + தரங்க
    கொன்று + தரம்


    நெடும் கான் கடந்து சென்று நீண்ட காட்டைத் தாண்டி அப்பால் போய்
    தரங்கக் கடல் தூர்த்து அலைகளை உடைய கடலை மலைகளால் நிரப்பி
    இலங்கையில் தீயவரைக் கொன்று இலங்கையில் உள்ள அரக்கர்களைக் கொன்று
    தரம் குவித்தாய் அவர்களது உடல்களை மலையாய்க் குவித்தவனே !
    சோலை மலைக் கோவலனே சோலை மலையில் இருக்கும் ஆயனே !
    என்று உதரம் கலந்தேன் எப்போது நான் தாயின் வயிற்றில் வந்து புகுந்தேனோ
    அற்றை நாள் தொட்டு அந்த நாள் முதல்
    இற்றை வரை தரங்கிக்கின்றேற்கு இன்று வரை விடாமல் அலைகின்ற எனக்கு
    அருள்வாய் அவ்வாறு மீண்டும் நேராதபடி கருணை செய்வாய்


    Last edited by sridharv1946; 06-09-13, 11:43.
Working...
X