3. அழகர் அந்தாதி- 023/100 அழகனை வணங்காதவர் பிறவிக் கடலில் மூழ்குவர் !
கொண்டலையா நிற்கும் ஐம்புலக்கோண் மகரங்களின் ஈர்ப்-
புண்டலையார் பிறவிக்கடன் மூழ்குவர் உத்தமனைத்-
தண்டலையார் திருமாலிருஞ்சோலைத் தனிச் சுடரைப்-
புண்டலையால் வணங்கார் அணங்கார் வினை போக என்றே
பதவுரை : கொண்டு + அலையாநிற்கும்
உண்டு + அலை + ஆர்
தண்டலை + ஆர்
புண் + தலையால்
கொண்டு அலையாநிற்கும் சில பேதைகள் மனதைத் தன் வசம் ஆக்கிக் கொண்டு வருத்தும்
ஐம் புலக் ஐம்புலன்கள் ஆகிய
கோள் மகரங்களின் ஈர்ப்பு உண்டு வலிய சுறா மீன்களால் இழுக்கப்பட்டு
அலை ஆர் பிறவி கடல் பிறப்புத் துன்பமாகிய அலைகள் பொருந்திய கடலில்
மூழ்குவர் மூழ்குவார்கள்
உத்தமனை புருஷோத்தமனும்
தண்டலை ஆர் குளிர்ந்த சோலைகள் உள்ள
திருமாலிருஞ்சோலைதிருமாலிருஞ்சோலையில் உள்ள
தனிச் சுடரை தேஜோ ரூபியுமான அழகர் பிரானை
அணங்கு ஆர்வினை போக என்று "துன்பம் நிறைந்த கருமங்கள் ஒழியட்டும்" என்று
புண் தலையால் வணங்கார் தங்கள் தலையால் வணங்க மாட்டார்கள்