3. அழகர் அந்தாதி- 020/100 அலங்காரர் பொற்றாளை ஏத்துவது எப்போது ?
செப்போதனம் செழுந்துப்போ செவ்வாய் என்று சேயிழையார்க்கு
ஒப்போத நெஞ்சு உருகித் திரிவீர் ! கனல் ஊதை மண் விண்
அப்போதனம் என்று அமுது செய்தார் அலங்காரர் பொற்றாள்
எப்போதனந்தல் தவிர்ந்து ஏத்த நீங்கள் இருக்கின்றதே
பதவுரை : செப்போ + தனம்
ஒப்பு + ஓத
அப்பு + ஓதனம்
எப்போது + அனந்தல்
தனம் செப்போ 'கொங்கைகள் பொற்கலசங்களோ ?
செவ்வாய் செழும் துப்போ என்று சிவந்த வாய் செழுமையான பவளமோ ? ' என்று
சேயிழையார்க்கு ஒப்பு ஓத ஆபரணம் அணிந்த பெண்களுக்கு உவமை சொல்வதில்
நெஞ்சு உருகித் திரிவீர் மனம் நெகிழ்ந்து வீணே அலைபவர்களே !
கனல் ஊதை மண் நெருப்பையும் , காற்றையும் , நிலத்தையும்
விண் அப்பு ஓதனம் என்று வானத்தையும் , நீரையும் உணவு என்று பிரளய காலத்தில்
அமுது செய்தார் அலங்காரர் உட்கொண்டவரான அழகருடைய
பொற்றாள் அழகிய திருவடிகளை
அனந்தல் தவிர்த்து தமோ குணம் நீங்கி
நீங்கள் ஏத்த இருக்கின்றது எப்போது நீங்கள் எப்போது துதிப்பீர்கள் ?