Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 019/100 கஞ்சனை வென்றானை அஞ்சல் எ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 019/100 கஞ்சனை வென்றானை அஞ்சல் எ

    3. அழகர் அந்தாதி- 019/100 கஞ்சனை வென்றானை அஞ்சல் என்றானை அஞ்சலி செய் !

    வெறுத்தவரைக்கஞ்சனைச் செற்றுளார் விடைவெற்பர் வெங்கட்-
    கறுத்தவரைக்கஞ்சலென்று வந்தார் கனகாம்பரத்தைப்-
    பொறுத்தவரைக்கஞ்சனமேனிக்காவிபுலர்ந்துருகிச்-
    சிறுத்தவரைக்கஞ்சங்கூப்புமென்பேதைக்கென் செப்புவதே






    பதவுரை : வெறுத்தவரை + கஞ்சனை
    கறுத்த + வரைக்கு +அஞ்சல்
    பொறுத்த +அரைக்கு + அஞ்சனமேனி
    சிறுத்த + வரை + கஞ்சம்

    கஞ்சனை வெறுத்தவரை செற்றுளார் கம்சனையும் , மற்ற பகைவர்களையும் வென்றவரும் ,
    வெம் கண் கறுத்த வரைக்கு கொடிய கண்களுடைய கரிய மலை போன்ற யானைக்கு
    அஞ்சல் என்று வந்தார் "அஞ்சாதே" என்று சொல்லி வேகமாக வந்தவருமான
    விடை வெற்பர் ரிஷபகிரியில் இருக்கும் அழகர் பிரானுடைய
    கனக அம்பரத்தை பொறுத்த அரைக்கு பீதாம்பரம் தரித்த இடையையும் ,
    அஞ்சன மேனிக்கு மை போன்ற கரிய திருமேனியையும் நினைந்து
    ஆவி புலர்ந்து உருகி உயிர் வருந்திக் கரைந்து ,
    வரை சிறுத்த கஞ்சம் கூப்பும் ரேகை உடைய தாமரை போன்ற சிறு கைகளைக் கூப்பும்
    என் பேதைக்குஎன் செப்புவது என் பெண்ணிற்கு என்ன சொல்வது ?


Working...
X