3. அழகர் அந்தாதி- 018/100 அழகர் அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே !
மருந்துவந்தார் தொழும் மாலிருஞ்சோலைமலை அழகர்
"அருந்துவந்தாரணி" என்று அயின்றார் அடல் ஆயிர வாய்
பொருந்துவந்தார் பணிப்பாயார் விதுரன் புது மனையில்
விருந்துவந்தார் - அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே
பதவுரை : மருந்து + உவந்தார்
அருந்துவம் + தாரணி
பொருந்து + வந்து + ஆர்
விருந்து + வந்தார்
அருந்துவம் தாரணி என்று அயின்றார் "பூமியை உண்போம்" என்று நினைத்து உண்டவரும்
அடல் ஆயிர வாய்பொருந்து வலிமையுள்ளவரும் , ஆயிரம் வாய்கள் உடையவரும்
வந்து ஆர் பணி காற்றை உணவாகக் கொள்பவருமான ஆதி சேஷன் எனும் பாம்பை
பாயார் சயனம் ஆகக் கொண்டவரும்
விதுரன் புது மனையில் விதுரனது புது மாளிகையில்
விருந்து வந்தார் விருந்தினராக வந்தவரும் ,
மருந்து உவந்தார் தொழும் அமிர்தம் விரும்பி உண்ட தேவர்கள் வணங்கும் ,
மாலிருஞ்சோலை அழகர் திரு மாலிருஞ்சோலையில் இருக்கும் அழகருடைய
அடியார்க்கு தொண்டர்களுக்கு
நோயும் வெறுமையும் இல்லை பிணியும் தரித்திரமும் ஒரு நாளும் வராது .