Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 017/100 கரும்பனைக் கூற்று என்பவ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 017/100 கரும்பனைக் கூற்று என்பவ&

    3. அழகர் அந்தாதி- 017/100 கரும்பனைக் கூற்று என்பவளுக்குக் கரும் பனையே மாற்று !

    சாற்றுக்கரும்பனைக் கூற்றென்னுமாசைத்தமிழ் மலயக்-

    காற்றுக்கரும்பனையுங் கண்படாளலங்காரற்கண்ட-
    ரேற்றுக்கரும்பனையக் கொங்கையாள் கொண்டவின்னலுக்கு
    மாற்றுக்கரும்பனையல்லாது வேறு மருந்தில்லையே

    பதவுரை : சாறு + கரும்பனை
    காற்றுக்கு + அரும்பல் + நையும்
    ஏற்றுக்கு + அரும்பு + அனைய
    மாற்று + கரும் + பனை

    சாற்றுக் கரும்பனை
    இரசம் உள்ள கரும்பை வில்லாக உடைய மன்மதனை

    கூற்று என்னும் யமன் என்று சொல்வாள் .
    ஆசைத் தமிழ் எல்லோரும் விரும்புவதும் , தமிழ் வளர்ந்த இடமான
    மலயக் காற்றுக்கு பொதிகை மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று
    அரும்பல் நையும் சிறிதாக வீசினாலும் வருந்துவாள் .
    கண் படாள் இரவிலும் துயில் கொள்ளமாட்டாள் .
    அண்டர் ஏற்றுக்கு அலங்காரர்க்கு தேவர்களின் சிங்கம் போன்ற அழகர் பிரானுக்கு
    அரும்பு அனைய கொங்கை தாமரை மொட்டு போன்ற தனங்கள் உடைய இவள்
    கொண்ட இன்னலுக்கு மாற்று படும் துயரத்திற்கு மாற்றாக
    கரும் பனை அல்லாது கரிய பனை மடலை ஊர்தலை விட்டால்
    வேறு மருந்து இல்லையே இவள் காதல் நோயை தீர்க்க வேறு வழி இல்லையே



    Last edited by sridharv1946; 04-09-13, 19:27.
Working...
X