Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 014/100 அழகரை மனத்துள் வைப்பார்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 014/100 அழகரை மனத்துள் வைப்பார்

    3. அழகர் அந்தாதி- 014/100 அழகரை நவின்று மனத்துள் வைப்பார்அவர் பதம் சேருவரே !

    நாமங்களாவி நழுவுந்தனையும் நவின்று அவரைத்-
    தாமங்களாவி மனத்துள் வைப்பார் - தண்டலையின் அகில்
    தூமங்களாவி மணம் நாறும் மாலிருஞ்சோலை அன்பர்
    சேமங்களாவின் கனி அனையார் பதம் சேருவரே




    பதவுரை : நாமங்கள் + ஆவி
    தாம் + அங்கு + அளாவி
    தூமங்கள் + ஆவி
    சேமம் + களாவின்

    ஆவி நழுவும் தனையும் உயிர் நீங்கும் வரையிலும்
    நாமங்கள் நவின்று அழகருடைய திரு நாமங்களை வாயினால் உச்சரித்து
    அவரைத் தாம் அங்கு அளாவி அப்பெருமானை அவ்விடத்தில் அடைந்தது பற்றி
    மனத்துள் வைப்பர் மனத்தால் தியானித்து , உடலால் வணங்குபவர்கள்
    தண்டலையில் ஆவி சோலைகளில் குளங்கள்
    அகில் தூமங்கள் மணம் நாறும் அகில் புகை மணம் வீசும்
    மாலிருஞ்சோலை அன்பர் திரு மாலிருஞ்சோலையில் எழுந்தருளி இருப்பவரும் ,
    அன்பர் எல்லோரிடமும் அன்புடையவரும் ,
    சேமம் பாதுகாப்பாக உள்ளவரும் ,
    களாவின் கனி அனையார் களாப் பழம் போன்ற கரிய நிறமுடையவரான அழகரின்
    பதம் சேருவரே திருவடிகளை அடைவார்கள்



    Last edited by sridharv1946; 03-09-13, 20:50.
Working...
X