3. அழகர் அந்தாதி- 013/100 அழகர் நாமங்கள் எல்லாவற்றையும் உருக்கும் !
நெஞ்சமுருக்கும் உயிர் உருக்கும் தொல்லை நீள் வினையன்
வஞ்சமுருக்கும் பவம் முருக்கும் - திருமால் அழகர்
கஞ்சமுருக்கு மலர் வாய்த் திரு நண்பர் கஞ்சனுக்கு
நஞ்சமுருக்குவளை ஆழி அன்னவர் நாமங்களே
பதவுரை : நெஞ்சம் + உருக்கும்
வஞ்சம் + உருக்கும்
கஞ்ச + முருக்கு
நஞ்சம் + உரு + குவளை
கஞ்ச தாமரையில் அமரும் ,
முருக்கு மலர் வாய்பலாசமலர் போன்று சிவந்த வாய் உடைய
திரு நண்பர் மகா லக்ஷ்மிக்கு அன்புடைய கொழுநரும்
கஞ்சனுக்கு நஞ்சர் கம்சனுக்கு நஞ்சு போன்றவரும்
உருக் குவளை ஆழி திருமேனி நிறம் நீலோற்பல மலரையும் கடலையும்
அன்னவர் நாமங்களே போன்றவரான அழகரின் திரு நாமங்கள்
நெஞ்சம் உருக்கும் பக்தர்களுடைய மனதை உருக வைக்கும்
உயிர் உருக்கும் உயிரை ஆனந்தத்தால் நெகிழ வைக்கும்
தொல்லை நீள் வினையன் பழமையான நீண்ட கருமங்களின்
வஞ்சம் உருக்கும் வஞ்சனையை அழிக்கும்
பவம் முருக்கும் பிறப்பை ஒழிக்கும்