Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 012/100 மாலிருஞ்சோலை அடை நெஞ்சம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 012/100 மாலிருஞ்சோலை அடை நெஞ்சம&

    3. அழகர் அந்தாதி- 012/100 மாலிருஞ்சோலை அடை நெஞ்சமே !

    நிலையாமையான உடலும் உயிரும் நினைவும் தம்மிற்-
    கலையாமையானங்கலக்குமுன்னே கங்கை வைத்த சடைத்-
    தலையாமையானனன்றாமரையான்றொழுந்தாளழக-
    னலையாமையானவன் மாலிருஞ்சோலை அடை நெஞ்சமே



    பதவுரை : நிலையாமை + ஆன
    கலையா + மையானம்
    தலை + ஆம் + ஐ + ஆனனன்
    அலை + ஆமை + ஆனவன்


    நெஞ்சமே என் மனமே !
    நிலையாமை ஆன உடலும் அழியக்கூடிய உடம்பும் ,
    உயிரும் நினைவும் உயிரும் , சிந்தனையும்
    தம்மில் கலையா தம் நிலை மாறி (இறந்து)
    மையானம் கலக்குமுன்னே சுடுகாட்டை அடைவதற்கு முன்னே
    கங்கை வைத்த சடை தலை ஆம்கங்கா நதியை தரித்த சடை உடைய தலையும்
    ஐ ஆனனன் ஐந்து முகங்களும் கொண்ட சிவனும் ,
    தாமரையான் தாமரையில் தோன்றிய பிரமனும்
    தொழும் தாள் அழகன்வணங்கும் திருவடிகள் உடைய அழகனும் ,
    அலை ஆமை ஆனவன் பாற்கடலில் கூர்மாவதாரம் எடுத்தவனுமான பெருமானுடைய
    மாலிருஞ்சோலை அடை திரு மாலிருஞ்சோலையைச சேர்வாய் !



Working...
X