3. அழகர் அந்தாதி - 006/100 நெஞ்சமே நினையாய் சுந்தரத்தோளனை !
நின்றபிராணன் கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்
சென்றபிராயம்வம்பே சென்றதாற் றிருமங்கை கொங்கை
துன்றபிராமனைச் சுந்தரத்தோளனைத் தோளின் மல்லைக்-
கொன்றபிரானை யடைந்தடியாரொடுங்கூடுகைக்கே
பதவுரை : நின்ற + பிராணன்
சென்ற + பிராயம்
துன்ற + அபிராமனை
கொன்ற + பிரானை
நெஞ்சமே மனமே !
சென்ற பிராயம் வம்பே சென்றது கழிந்த ஆயுள் வீணே போய் விட்டது
நின்ற பிராணன் கழலுமுன்னே நிற்கும் உயிர் உடலைப் பிரிவதற்கு முன்னே
திருமங்கை கொங்கை துன்று திருமகளின் தனங்களை நெருங்கித் தழுவும்
அபிராமனை சுந்தரத்தோளனை அழகனும் அழகிய தோள்களை உடையவனும்
தோளின் மல்லைக் கொன்ற புஜபலத்தால் மல்லர்களைக் கொன்ற
பிரானை அடைந்துஎம்பெருமானை சரணம் அடைந்து
அடியாரொடும் கூடுகைக்கு அவனது பக்தர்களோடும் சேர்வதைப் பற்றி
நினையாய் சிந்திப்பாய் !