Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 003/100 அழகரிடம் பித்தர் ஆகுவீர&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 003/100 அழகரிடம் பித்தர் ஆகுவீர&

    3. அழகர் அந்தாதி- 003/100 அழகரிடம் பித்தர் ஆகுவீர் !

    மாணிக்க
    கம் புரை மேனி மாலுக்கு வார்சடையோன்

    பாணிக்கனகம் பலி ஒழித்தானுக்கு , பச்சைத்துழாய்
    ஆணிக்கனகமுடி அலங்காரனுக்கு , அண்டம் எல்லாம்
    பேணிக்கனகனுக்கு - பித்தர் ஆனவர் பித்தர் அன்றே




    பதவுரை :மாணிக்க + நகம் (மலை)
    பாணி + கன + கம் (கபாலம்)
    ஆணி + கனக + முடி (கிரீடம்)
    பேணிக்கு + அனகனுக்கு


    மாணிக்க நகம் புரை மேனி மாலுக்கு மாணிக்க மலையை ஒத்த மேனி உடைய திருமாலும் ,
    வார் சடையான் நீண்ட சடையைக் கொண்ட சிவனுடைய
    பாணி கன கம் கையில் இருந்த கனமான கபாலத்துடன்
    பலி ஒழித்தானை பிச்சை எடுப்பதை நீக்கியவனும் ,
    அண்டம் எல்லாம் பேணிக்கு அண்ட கோளங்களை எல்லாம் காப்பவனும் ,
    அனகனும் குற்றம் இல்லாதவனும் ,
    பச்சைத் துழாய் பசுமையான து ளசி மாலை அணிந்தவனும் ,
    ஆணிக் கனக முடி ஆணிப் பொன் கிரீடம் அணிந்தவனுமான
    அலங்காரனுக்கு பித்தர் ஆனார் அழகர் பிரானிடம் பித்து கொண்டவர்
    பித்தர் அன்றே சாதாரண் பித்தர் போன்று இகழத் தக்கவர் அல்ல



    Last edited by sridharv1946; 31-08-13, 13:48.
Working...
X