Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 002 / 100 அழகா ! இரை மாற்றம் வேண்டு&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 002 / 100 அழகா ! இரை மாற்றம் வேண்டு&#

    3. அழகர் அந்தாதி- 002 / 100 அழகா ! இரை மாற்றம் வேண்டும் - இதுவே என் விண்ணப்பம் !

    மாற்றம் உண்டு என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும்
    இரை மாற்றம் வேண்டும் இதுவே என் விண்ணப்பம் - என் அப்பனே !
    உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் ! அம்பு அடைத்து இலங்கை
    வரை மாற்றலரைச செற்றாய் ! அழகா ! கரு மாணிக்கமே !



    என் அப்பனே என் தலைவனே !
    உரை மாற்று அளவு அற்ற உரைத்துப் பார்க்க முடியாத
    பொன் உடுத்தாய் பொன்னாலான பீதாம்பரத்தை அணிந்தவனே !
    அம்பு அடைத்து அம்புகளை விடுத்து
    இலங்கை வரை மாற்றலரை இலங்கையில் உள்ள மலை போன்ற அசுரர்களை
    செற்றாய் அழித்தவனே !
    அழகா திரு மாலிருஞ்சோலை மலை அழகா !
    கரு மாணிக்கமேகரியமாணிக்கம் போன்ற நிறம் உள்ளவனே !
    உரை மாற்றம் உண்டு உன்னிடம் சொல்லும் சொல் உண்டு !
    என் பொறி ஐந்தும் எனது ஐம்புலன்களும்
    உன்னிடத்து அன்றி உண்ணும் உன்னை விட்டு விட்டு பிற இடங்களில் அனுபவிக்கும்
    இரை மாற்றம் வேண்டும் விஷயங்களை நீக்க வேண்டும்
    இதுவே என் விண்ணப்பம் இதுவே என் வேண்டுகோள் !

    Last edited by sridharv1946; 31-08-13, 12:38.
Working...
X